இந்த வருட இறுதிக்குள் நடிகர் சங்க கட்டிடம் வேலைகள் முடிந்து விடும், நடிகர் சங்க கட்டிடம் 75% வேலை முடிந்து விட்டதாகவும் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பவர் ஸ்டார் சீனிவாசன் பேட்டி

சென்னையில் பிரபல நட்சத்திர விடுதியில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் சாதனைப் பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கலந்து கொண்டார். கல்வித்துறை,காவல்துறை,
அழகுக்கலை நிபுணர்கள், தையல்காரர்கள் என பல துறைகளில் சாதனை படைத்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஹெச் ஆர் டபிள்யூ எஃப் விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சி நிறைவடைந்த பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் அவர்கள் :

என்னுடைய நண்பர் ஷேக் HRWF அமைப்பு நடத்தி வருகிறார்.நான் விருது நிகழ்ச்சி நடத்துகிறேன். அதில் நீங்கள் சிறப்பு விருந்தினராக வரவேண்டும் என அழைத்தார். சரி என்று தான் கூறினேன். இங்கு வந்து பார்த்தால் மிகவும் பிரமாண்டமாக இருக்கிறது மிகவும் நிறைவாக இருக்கிறது அவருடைய வளர்ச்சி மென்மேலும் வளர வேண்டும்.

கேள்வி :உங்களுடைய திரை வாழ்க்கை எப்படி சென்று கொண்டிருந்தது?
பதில் :என்னுடைய திரை வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கிறது. அடுத்து வரும் காலங்களில் மூன்று திரைப்படங்களுக்கு கதாநாயகனாகநடித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டு திரைப்படங்கள் முடித்து விட்டேன். கடைசியாக உள்ள திரைப்படத்திற்கு உரிய கதாபாத்திரத்திற்கு தான் நான் தாடி வளர்த்துக் கொண்டிருக்கிறேன். அந்தத் திரைப்படமும் இன்னும் பத்து நாட்களில் முடிந்து விடும்.

கேள்வி :நடிகர் சந்தானம் அவர்களிடம் இணைந்து நடிக்க வாய்ப்பு உள்ளதா என்று கேட்டபோது?
பதில் :நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக பெரிய படம் ஒன்று நடிக்க இருக்கிறோம்.

கேள்வி :நடிகர் பயில்வான் ரங்கநாதன் கேட்ட ஒரு கேள்விக்கு நடிகர் விஷால் அவர்கள் பதில் அளிக்க மாட்டேன் என்று பகிரங்கமாக கூறியிருக்கிறார்.
பதில் :அவர் எல்லாரையும் விமர்சனம் செய்கிறார். இது ஒன்றும் அவருக்கு புதியது அல்ல. அவர் பெரும்பாலும் நடிகைகளை தான் விமர்சனம் செய்வார். இப்போது நடிகர்களை விமர்சனம் செய்கிறார். அவர் கேட்ட கேள்வியை பத்தோடு பதினொன்றாக வைத்துக் கொள்ளலாம். அவர் கேட்கும் கேள்விக்கு கட்டாயமாக பதில் சொல்ல வேண்டும் என்கிற அவசியம் இல்லையே.

கேள்வி :நடிகர் சங்க கட்டடம் குறித்து தற்போதைய நிலவரம்?
பதில் :நடிகர் சங்க கட்டிடம் 75% வேலை முடிந்து விட்டதாகவும். தேர்தல் காரணமாக சற்று கால தாமதம் ஆவதாகவும். இந்த வருட இறுதிக்குள் நடிகர் சங்க கட்டிடம் வேலைகள் முடிந்து விடும் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *