ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அருகே உள்ள கணியனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத தர்மராஜா திருக்கோயிலில் மகாபாரத திருவிழா கடந்த மாதம் 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

அதனைத் தொடர்ந்து தினமும் மாலை 2 மணி முதல் 5 மணி வரை தினசரி மகாபாரத சொற்பொழிவும் இரவு ஸ்ரீ பொன்னியம்மன் கட்டை கூத்து குழுவினாரால் நாடகம் நடைபெற்று வந்த நிலையில் மகாபாரதத்தின் முக்கிய நிகழ்வான 18 ஆம் போரின் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது. அப்போது கோவில் அருகாமையில் உள்ள மைதானத்தில் 100 அடி நீளம் கொண்ட துரியோதனன் பிரம்மாண்ட மண் சிற்பத்தால் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

தொடர்ந்து துரியோதனன், பீமன் வேடமிட்ட நாடக கலைஞர்கள் தண்டாயுதங்கள் ஏந்தி சண்டைக் காட்சி நடைபெற்றது.

மேலும் மூன்று முறை மண் சிற்பத்தை வலம் வந்தபின் பீமன், துரியோதனின் தொடை பகுதியில் கட்டையால் அடித்து துரியோதனன் படுகளம் செய்தார்.

தொடர்ந்து துரியோதனன் தாயார் காந்தாரி இறந்த மகனை பார்த்து ஒப்பாரி வைத்து அழுகின்ற காட்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் விழா குழுவினர்கள் , ஊர் நாட்டமை தாரர்கள்,ஊர் பொதுமக்கள் உட்பட கணியனூர் சுற்றியுள்ள டி புதூர், வளையாத்தூர், கீழ்ப்பாடி, பழையனூர், குண்டலேரி, அத்தித்தாங்கள் போன்ற
கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டது .மாலை தீமிதி திருவிழாவும் இரவு சாமி ஊர்வலம், நாடகம் நடைபெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *