கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே
ஷண்டன் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து ஆட்சி செய்யும் மலையாள அக்னி கருப்புசாமி சுவாமி சித்ரா பௌர்ணமி திரு விழா சிறப்பாக நடைபெற்றது

முன்னதாக கள்ளழகர் சுவாமிக்கு அபிஷேக ஆராதனை சிறப்பு பூஜைகள் பெண்கள் விளக்கு வைத்து வழிபாடு செய்து சிறப்பு ஆராதனை செய்தனர்

தொடர்ந்து சுவாமி கள்ளழகர் தெருக்கள் வழியாக வாணவெடிகள் ஒளிக்க வடவாறு ஆற்றுக்கு பக்தர்கள் ஊர்வலமாக சென்றுவடவாறு ஆற்றில். இறங்கி புனித நீராடினார் பின்னர் ஆற்றில் வைக்கப்பட்ட கள்ளழகருக்கு அபிஷேகம் செய்தும் மழை வேண்டியும் இப்பகுதியில் விவசாயம் செழுமையாக விளையவும் பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழ்வதற்கும் சிறப்பு பூஜை நடத்தி அபிஷேகம் செய்தனர்பின்னர் ஒருவருக்கு ஒருவர் கள்ளழகர் மேலே தண்ணீரை பீச்சி அடித்து மகிழ்ந்தனர் பின்னர் கள்ளழகர் ஊர்வலத்தின் போது அங்கிருந்த பெண்கள் சிறுமிகள் நடனமாடி தெருக்கள் வழியாக வரவேற்று பின்னர் சுவாமி சன்னதியை வந்து அடைந்தது

முன்னதாக சுவாமிக்கு அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வர்ர் உடைய திருக்கல்யாணம்வைபோகம் நடைபெற்றது

பின்பு 21 விதமான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் பூஜை நடைபெற்றது இதற்கான ஏற்பாட்டை ஆலைய பூசாரி நடராஜன் மற்றும் கிராம பொது மக்கள் செய்து இருந்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *