பாவேந்தனைக் கொண்டாடுவோம்

தமிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்

தமிழை உயிருக்கு நிகராய் உயர்த்தியவர்

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு

தமிழின் பெருமையை உலகிற்கு உணர்த்திய
உன்னதக் கவிஞர் அறிவு விரிவு செய்
விசாலப் பார்வையால் விழுங்கு என்று விசாலப்பார்வைக் கொள்ளச் செய்தவர்

முண்டாசுக் கவிஞரைக் கொண்டாடியவர்

வண்மை சேர் தமிழ்நாடு எங்கள் நாடு இதை வாழ்த்துவோம் அன்போடு என்று அழகாகப் பாடியவர்

வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே என்று அழகுற பாடியவர் மொழியை மொழியின் பெருமையைக் கொண்டாடியவர் பாவேந்தர்

பாவந்தவரைக் கொண்டாடுவோம்
பைந்தமிழ் காட்டிய வழிநின்று

புதுச்சேரியில்,1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் நாள் பிறந்தவர்.

இயற்பெயர் கனகசுப்பிரத்தினம்.

இவர் மகாகவி சுப்ரமணிய பாரதியார் மீது தாளாப் பற்றால் தனது பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டவர். தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர். தமது எழுச்சிமிக்க எழுத்துக்களால், புரட்சிக்கவிஞர், பாவேந்தர் என அன்புடன் அனைவராலும் அழைக்கப்பட்டவர்.

இவர் கவிதை வடிவில் குயில் என்ற திங்களிதழை நடத்தினார்.

தந்தை கனகசபை தாய் லட்சுமி. 1920ம் ஆண்டு பழனி அம்மையார் என்பவரை மணந்துகொண்டார்.

புதுச்சேரியில் பிறந்ததால் சிறு வயதில் பிரெஞ்சு மொழிப் பள்ளியில் படித்தார்.

பாரதிதாசன் கவிதை, இசைப்பாடல், நாடகம், சிறுகதை, புதினம், கட்டுரை என அனைத்து வடிவங்களிலும் தமிழில் எழுதினார்.

எனினும் கவிதைகளே அதிகம் எழுதியதால் அதிலும் குறிப்பாக புரட்சிகரமான கவிதைகளை எழுதியதால் அவர் புரட்சிக்கவிஞர் என்று அழைக்கப்பட்டார்.

இவரது பெயரால் திருச்சியில் பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைக் கழகம் அமைந்து பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகளை ஆய்வாளர்களை உருவாக்கி வருவது பெருமைக்கும் பெருமையன்றோ

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *