குண்டடம் வெங்காய வியாபாரியிடம் இருந்து நூதன முறையில் 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள சின்ன வெங்காயம் மற்றும் வாகனம் திருட்டு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் பகுதியில் அதிக அளவில் சின்ன வெங்காயம் நடவு செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் சின்ன வெங்காய வியாபாரியாக குண்டடம் புது நவக்கொம்பு பகுதியைச் சேர்ந்த நல்லப்பகவுண்டர் மகன் பாலுசாமி வயது 43 என்பவர் சின்ன வெங்காயங்களை வாங்கி வெளி மாவட்டத்திற்கு மொத்தமாக விற்பனைக்கு அனுப்பி வருகிறார்.

சின்ன வெங்காயங்களை தனியார் லாரி சர்வீஸ் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உடுமலை பகுதியில் இயங்கி வரும் தனியார் லாரி சர்வீஸுக்கு தொடர்பு கொண்டு தூத்துக்குடிக்கு சின்ன வெங்காயத்தை அனுப்ப வேண்டும் ஈச்சர் வாகனம் இருந்தால் அழைக்கவும் என தெரிவித்து இருந்தார்.

அதைத் தொடர்ந்து தூத்துக்குடியைச் சேர்ந்த இரண்டு பேர் உடுமலை தனியார் லாரி புக்கிங் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு தூத்துக்குடிக்கு வாகனம் செல்ல இருக்கிறது வாடகை இருந்தால் கூறுங்கள் என தெரிவித்தனர்.அதைத் தொடர்ந்து உடுமலையில் உள்ள தனியார் லாரி புக்கிங் ஆபீஸ் தூத்துக்குடியைச் சேர்ந்த நபர்களுக்கு பாலுசாமியின் தகவல் என்னை பரிமாறியுள்ளனர்.

இந்நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த நபர்கள் பாலுச்சாமியை தொடர்பு கொண்டு ஈச்சர் வாகனத்தில் குண்டடம் வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த இரண்டு பேர் 7 லட்ச ரூபாய் மதிப்புள்ள சின்ன வெங்காயத்தை தூத்துக்குடிக்கு ஏற்றி கொண்டு புறப்பட்டனர்.

புறப்பட்ட வாகனம் தூத்துக்குடி செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லாததால் சந்தேகம் அடைந்த பாலுசாமி உடனடியாக குண்டடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தனிப்படை அமைக்கப்பட்டு குண்டடம் போலீசார் தூத்துக்குடி சேர்ந்த நபர்களின் தொலைபேசி எண்ணை வைத்து தூத்துக்குடிக்கு சென்றனர்.அப்போது தூத்துக்குடியில் சின்ன வெங்காயம் கொடுக்க வேண்டிய இடத்திற்கு பதிலாக வேறு ஒரு இடத்தில் சின்ன வெங்காயத்தை வைத்திருந்தனர்.

இதனை அறிந்த குண்டடம் போலீசார் தூத்துக்குடியில் இருந்து ஈச்சர் வாகனம் மற்றும் ஏழு லட்சம் ரூபாய் மதிப்புள்ள சின்ன வெங்காயத்தையும் குண்டடம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது தூத்துக்குடியைச் சேர்ந்த கனகராஜ் மகன் ஜெபக்குமார் வயது 38 மேலும் அதே தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சரவணகுமார் வயது 31 இரண்டு பேர் ஏன் தெரிய வந்தது.ஏழு லட்சம் ரூபாய் மதிப்புள்ள சின்ன வெங்காயத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த குற்றவாளிகள் இரண்டு பேரின் ஈச்சர் வாகனத்திற்கு போலி பதிவு எண்ணை வைத்து 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சின்ன வெங்காயத்தை திருடி சென்றது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து குண்டிடம் காவல்துறையினர் தூத்துக்குடியைச் சேர்ந்த இருவரையும் கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய ஈச்சர் வாகனத்தையும் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சின்ன வெங்காயத்தையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஏழு லட்சம் ரூபாய் மதிப்புள்ள சின்ன வெங்காயத்தை அதன் உரிமையாளர் பாலுச்சாமிடம் ஒப்படைத்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *