காஞ்சி ஸ்கேட்டிங் &ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் சார்பில் கோடை விடுமுறை ஒட்டி பள்ளி மாணவ மாணவியரை ஸ்கேட்டிங் பயிற்சியில் சிறப்பித்து ஊக்குவிக்கும் வகையில் கடந்த ஆண்டு மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இவ்வாண்டு இரண்டாம் ஆண்டிற்கான மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியானது காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் அருகில் உள்ள ஸ்கேட்டிங் நடைபெற்றது.இதில் சென்னை,காஞ்சிபுரம்,செங்கலப்பட்டு,தர்மபுரி,பாண்டிச்சேரி உள்ளிட்ட 10மாவட்டங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.
இந்த பேட்டியில் 2வயது முதல் 13வயது வரையிலான 200 மீட்டர் மற்றும் 400மீட்டர் ஸ்கேட்டிங் பந்தயமானது நடைபெற்றது. இதில் ஒவ்வொரு சுற்றிருக்கும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ மாணவிகளுக்கு பதக்கமும் வழங்கப்பட்டது.
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஸ்கேட்டிங் மாணவர்கள் மட்டுமின்றி அவர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் என ஏராளமானோர் இதில் கலந்துகொண்டு மாணவ மாணவிகளை கைகளை தட்டி ஊக்குவித்தனர்.