கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ.முகேஷ்.
சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைப்பெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் (12.05.2024) அன்று கடந்த 2012-13ம் கல்வியாண்டில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வை உயிரூட்டல் அறக்கட்டளை ஒருங்கிணைப்பு செய்திருந்தது. இந்த நிகழ்வுக்கு உயிரூட்டல் அறக்கட்டளை நிறுவனர் மு.சம்பத்குமார் தலைமை தாங்கினார் 200 க்கும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அந்த காலக்கட்டத்தில் அவர்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்கள் சந்தன், கணேசன், தனக்குமார், மீனாட்சிசுந்தரம், சோபனா, கவிதா, அம்சவேணி, ஜீவிதா, பூவரசி, நிவேதா, மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு.ராமன் துணை தலைவர் ஷானு, பொருளாளர் அப்ஷர், மற்றும் நிர்வாகிகள் திரு.சேகர், சுதாகர், ஜெபஸ்டின் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
முன்னாள் மாணவர்கள் தங்களின் பள்ளி கால நினைவுகளை நினைவு கூர்ந்து மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில் திரு.குமார், லோகநாதன், உள்பட பலரும் கலந்து கொண்டு முன்னிலை வகித்தனர். நம் பள்ளி பெருமையை காப்போம். அரசு பள்ளிகூடங்களின் நலனை மேம்படுத்துவோம். மரக்கன்று நடுவோம். சுகாதாரத்தை பேணிக் காப்போம் என தீர்மானம் நிறைவேற்றினர். மேலும் தமிழக பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் முன்னாள் மாணவர்களை விழுதுகள் என்ற நிகழ்வில் ஒன்று சேர்த்தமைக்கு தமிழக முதல்வருக்கும் பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கும் நன்றி கூறினர். தங்களது ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி மகிழ்ந்தனர்.