ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராணிப்பேட்டையில் உள்ள சி எம் சி மருத்துவக் கல்லூரி (ம) மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களின் இருசக்கர வாகன பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி மற்றும் சிஎம்சி இயக்குனர் விக்ரம் மேத்யூ ஆகியோர் கொடியசைத்தும் புறாக்களை பறக்க விட்டும் துவக்கி வைத்தனர்.

இப்பேரணி மருத்துவமனை நுழைவு வாயிலில் இருந்து துவங்கி சென்னை – பெங்களூர் நெடுஞ்சாலை வழியாக சென்று மீண்டும் மருத்துவமனை நுழைவு வாயிலில் வந்து நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் சுமார் 110 மருத்துவமனை ஊழியர்கள் முககவசம் கலந்து கொண்டனர் மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிஎம்சி ரத்த வங்கி மையத்தினை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முககவசம் அணிவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்