தென்காசி,

தென்காசி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் எம்.பத்ரி நாராயணன் 600க்கு 592 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றார்.

தென்காசி மாவட்டம் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 131 மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது. இப்பள்ளி மாணவர் எம்.பத்ரி நாராயணன் 600க்கு 592 மதிப்பெண்கள் பெற்று பள்ளி மற்றும் தென்காசி மாவட்டத்தில் முதலிடம் பெற்றார்.

இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் வருமாறு: தமிழ்-99, ஆங்கிலம்-97, இயற்பியல்-99, வேதியியல்-97, கணிதம்-100, கணினி அறிவியல்-100.
இப்பள்ளி மாணவி ஆர்.பேச்சியம்மாள் தேவி 580 மதிப்பெண்கள் பெற்று பள்ளி இரண்டாமிடமும், மாணவி யு.நித்யகல்யாணி 571 மதிப்பெண்கள் பெற்று பள்ளி மூன்றாமிடமும் பெற்றனர்.

மேலும் கணினி அறிவியலில் எம்.பத்ரி நாராணயன், எஸ்.அபிராமி, ஏ.சாருண்யா, கணிதத்தில் எம்.பத்ரி நாராயணன், எஸ்தருண், எம்.சூரியபிரகாஷ், இயற்பியலில் எம்.சூரிய பிரகாஷ், வணிகவியலில் எச்.முகமது அஃப்சல் ஆகியோர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனர்.

சாதனை படைத்த, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் தேவிகாராணி, பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளரும், முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்ளின் பால் சுசி, பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே.எஸ்.கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் உட்பட பலர் பாராட்டினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *