பெரம்பலூர் மாவட்டம். குன்னம் வட்டம். பெ .நல்லூர் (எ) பள்ளக்காடு கிராம பொதுமக்கள் சார்பில் சுமார் 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று சேர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தனர் அதில் பெ.நல்லூர் (எ) பள்ளக்காடு கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகிறோம். 200 குடும்பங்களில் ஒரு 10 குடும்பம் மட்டும் பட்டியல் இனத்தவர்கள் (CL) மற்றவர்கள் அனைவரும் வன்னியர்களே இதுவரை எங்கள் கிராமத்தில் சாதி மோதல்களோ, சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளோ இன்றி அமைதியான முறையில் வசித்து வருகிறோம்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் மதியழகன் பொது இடங்களில் இது சமூக மக்களிடையே ஜாதி உணர்வை தூண்டும் வகையிலும் ஜாதி கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை மட்டும் இழிவாக பேசியும் கொலை மிரட்டல் விடுக்கும் பாணியில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் மதியழகன் என்பவர் வேண்டுமென்றே எங்கள் கிராமத்தைபற்றியும், கிராமத்தில் வசிக்கும் பொது மக்களை பற்றியும், உண்மைக்கு மாறான பொய்செய்திகளை சொல்லி நடக்காததை நடந்தது

போலவும், சமுகத்தில் எங்கள் கிராமத்திற்கும் வன்னியர்களுக்கும் எதிராக பேசியுள்ள ஆடியோவால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்பட்டு சாதி மோதல்களை உருவாக்கி எங்களுக்கும் எங்கள் சமூக மக்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டுள்ளதாக தெரிகிறது.ஆகவே அம்மா அவர்கள் உண்மைக்கு மாறான அவதூறு கருத்துகளை தெரிவித்து கொலை மிரட்டல் விடுத்து பொது மக்களை அச்சுறுத்தி இருசமூக மக்களிடையே பகையுணர்வை ஏற்படுத்தி ஜாதி கலவரத்தை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த முயற்ச்சிக்கும் மதியழகன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புகார் மனு கொடுத்தனர்.

புகாரை பெற்றுக் கொண்ட அதிகாரி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமறைவாக உள்ள திமுக ஒன்றிய செயலாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டம் இட போவதாக கூறியுள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *