குலசேகரப்பட்டிணத்தில் விண்வெளி பூங்கா அமைப்பது வேலை வாய்ப்பை உருவாக்கும் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி
பெங்களூரில் இருந்து சென்னை விமான நிலையத்திற்க வந்த இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
குலசேகரப்பட்டிணத்தில் விண்வெளி பூங்கா அமைப்பது மிகவும் தேவையானது. பூங்கா தொழிற்சாலைகள் அதிகமாக வரும். அப்படி அதிகமாக தொழிற்சாலைகள் வந்தால் வேலை வாய்ப்புகள் உருவாகும். அந்த பகுதியே வளர்ச்சி அடையும்.
இஸ்ரோவின் அடுத்த முயற்சியாக ககன்யான் அனுப்ப திட்டமிட்டு வருகின்றனர், முதலில் ஆளில்லா விண்கலத்தை அனுப்பும் பணிகள் நடந்து வருகின்றது. இவ்வாறு அவர் கூறினார்.