வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள
யு எஸ் பி கல்லூரி குழும வளாகத்திலிருந்து 2. கிலோ மீட்டர் தூரம் ட்ரோன்கள் ஆளில்லாத / விமானங்கள் பறக்க தடை-தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவிப்பு;-

மே;-09

தென்காசி மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024, 37. தென்காசி(தனி) நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் கடந்த 19.04.2024 (வெள்ளிக்கிழமை) ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று வாக்குப்பதிவிற்குப் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான கொடிக்குறிச்சி
யு எஸ் பி கல்லூரி குழுமம் வளாகத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு வளையங்கள் ஏற்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மேற்படி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கொடிக்குறிச்சி யுஎஸ்பி கல்லூரி குழுமம் வளாகத்திலிருந்து 2 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக (Drones No Fly Zone) அறிவிக்கப்பட்டுள்ளதால், மேற்படி பகுதியில் தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளும் முடிவடையும் வரை ட்ரோன்கள் (Drones), ी क (Remotely Piloted Aircraft System RPAS) பறக்க தடை விதிக்கப்படுகிறது என தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான ஏ.கே.கமல்கிஷோர்
தெரிவித்து ள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *