பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே வடக்கலூர் கிராமத்தில் பச்சையம்மன் மற்றும் விநாயகர் கோவிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 18ம் தேதி காலை மகா கணபதி, லட்சுமி, ஹோமமும், வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரகனமும்,   மாலை அங்குரார்பனமும், ரக்ஷாபந்தனம், யாகசாலை முதற் கால பூஜையும் , இரவு பூர்னா ஹூதி, தீபாராதனையும் நடைபெற்றது.

நேற்று 19ந் தேதி அதிகாலை இரண்டாம் கால வேள்வி  பூஜையும் , நாடி சந்தானம், திரவியகோமமும், 8 மணிக்கு பூர்ணா ஹூதி, தீபாராதனையும் நடைப்பெற்றது.

8.30 மணிக்கு யாத்ராதானமும், கடங்கள் புறப்பாடும் நடைப்பெற்றது. பின்னர், 10.30 மணி அளவில் பச்சையம்மன், விநாயகர் கோவிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மூலவர், உற்சவர் கும்பாபிஷேகமும் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு 8 மணிக்கு உற்சவர் பச்சையம்மன் திருவீதி உலாவும், வாண வேடிக்கையும் நடைப்பெற்றது.

விழாவிற்கான ஏற்பாடுகளை வடக்கலூர் கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.

அதே போல் வயலூர் கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மகா கும்பபிஷேகமும், நடைப்பெற்றது கும்பாபிஷேக விழாக்களில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *