திருவாரூர் மாவட்டம்.

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் கடவுளுக்கு நிகரானவர்கள் மட்டுமன்றி இசையால் உலகையே நிலைநிறுத்தியவர்கள்: திருவாரூரில் கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி இசை விழா தொடக்க நிகழ்ச்சியில் ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. இராதாகிருஷ்ணன் பேச்சு…

   கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் கடவுளுக்கு நிகரானவர்கள் மட்டுமன்றி இசையால் உலகையே நிலைநிறுத்தியவர்கள் என ஜார்கண்ட மாநில ஆளுநர் சி.பி. இராதாகிருஷ்ணன் திருவாரூரில் நடைபெற்ற சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி இசை விழாவில் தெரிவித்தார்.      

   இன்றைக்கு இசை என்ற வார்த்தையினை உச்சரித்து அதில் உள்ள இன்பத்தை உணர்ந்து அனுபவிக்க காரணமாக இருந்தவர்கள் திருவாரூரில் கி.பி.17ம் நூற்றாண்டில் பிறந்த கர்நாடக சங்கீத மூம்மூர்த்திகள் என போற்றப்படும் ஸ்ரீசியாமாசாஸ்திரிகள், ஸ்ரீசத்குரு தியாகராஜர், ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சதர் ஆகியோர்.

          கி.பி.17ம் நூற்றாண்டில் சமகாலத்தில் பிறந்த இத்தகைய மும்மூர்த்திகளின் ஜெயந்தி இசை விழா ஆண்டுதோறும் திருவாரூரில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இதன்படி திருவாரூர் மேலவடம்போக்கித்தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சதர் பிறந்த ஜென்மபூமியில் இன்று தொடங்கி வரும் 13ம் தேதி வரை பிரபல கர்நாடக சங்கீத இசை கலைஞர்கள் பங்குகொள்ளும் இசை கச்சேரிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

   இத்தகைய ஜெயந்தி இசை விழா தொடக்க நிகழ்வினை மேதகு ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. இராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்து சிறப்புரையாற்றினார்.  அப்போது பேசிய அவர்.

   சங்கீத மும்மூர்த்திகளான ஸ்ரீசியாமாசாஸ்திரிகள், ஸ்ரீதியாகராஜர், ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சதர் பிறந்த மண் திருவாரூர்.  இவர்கள் மூவரும் கடவுளுக்கு நிகரானவர்கள்.  கடவுளின் மறு அவதாரமாக மும்மூர்த்திகள் விளங்கி வருகின்றனர்.  இசையால் உலகத்தையே நிலைநிறுத்தியவர்கள்.  இவர்களது புகழ் உலகம் முழுவதும் பரவவேண்டும்.  மும்மூர்த்திகளின் கீர்த்தனைகளை உலகம் முழுவதும் கொண்டுசெல்லும் வகையில் நாம் விழாக்களை நடத்தவேண்டும்.  இசை என்ற சொல் உலகில் இருக்கும் வரை மும்மூர்த்திகளின் புகழ் என்றைக்கும் நிலைத்து நிலைநிற்கும்.  இவரது புகழை யாராலும் அழிக்கமுடியாது.  கர்நாடக சங்கீத இசையினை கேட்கும்போது மனம் எளிதாகும்,  மனம் எளிதாகும்போது நல்ல சிந்தனைகளை விதைப்பதற்கும் நல்ல சிந்தனைகளை உள்வாங்கிகொள்ளும் பக்குவம் நமக்கு ஏற்படுகிறது.  இத்தகைய மூவரின் பணிகள் யாராலும் ஒருபோதும் மறக்கமுடியாது மட்டுமல்ல மறக்க கூடாததும் ஆகும்.

   இசைக்கு மட்டும்தான் எந்த பேதமும் இல்லாத அற்புதமான கலை என்றார்.

   தொடர்ந்து சரவணன், சுனில்கார்த்திகேயன் குழுவினரின் இசை கச்சேரி நடைபெற்றது.

   நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அறங்காவலர் டெக்கான்மூர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *