நாட்டு நலப்பணி முகாமில் மாணவர் களின் ஞாபக சக்தியை அதிகரிக்க பிரமிட் தியானம் மற்றும் பனை மரம் பயன் குறித்து விழிப்புணர்வு நிகழ்வு

புதுவை கதிர்காமம் இந்திரா காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி சார்பாக மாணவர்களின் ஞாப சக்தியை பிரமிட் தியானம் மூலம் அதிகரிக்கும் பயிற்சி மற்றும் தமிழரின் பாரம்பரிய கலாச்சார மரமான பனை மரத்தின் பயன்களை மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் திரு, கிஷோர் K. ஜான் அவர்கள் தலைமையில், பேராசிரியர் திரு, சீனுவாசன் அவர்கள் முன்னிலையில் புதுச்சேரி NSS அதிகாரி திரு.சதிஷ்குமார் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். பிரமிட் விஞ்ஞானி Dr.வரதராஜன் அவர்கள் பிரமிட் தியானம் மூலம் மாணவர்கள் ஞாபகத்தியை அதிகரிப்பது மற்றும் இன்றய மாணவர்களின் தேவைகள் குறித்தும், பூரணாஙகுப்பம் ஆனந்தன் அவர்கள் அழிந்து வரும் தமிழர்களின் கலாச்சார பண்பாட்டு பாரம்பரிய பனைமரம் எவ்வாறு மீட்டெடுக்கப்பட வேண்டும் என உணர்தப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி Nss பொறுப்பாளர் திரு.சரவணன் செய்திருந்தார், சிறப்பு அழைப்பாக டோண்ட் வேஸ்ட் புட் திரு, ஸ்டீபன் ராயப்பா, NDSO மற்றும் நிதி ஆலேசகர் திரு.பிரசாத் ஆகியோர் பங்கு பெற்றனர். இதில் 100 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *