ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் வெங்கடேசன்
நெடும்புலி கிராமத்தில் 25 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் நெடும்புலி மற்றும் புதுப்பேட்டை கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும் என்று அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நீண்ட காலமாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில் 2025_ 26 ம் ஆண்டு பஞ்.பொது நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்துமுடிந்து அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இந்த விழாவுக்கு பஞ்.தலைவர் மாறன் தலைமை வகித்தார்.யூனியன் கவுன்சிலர் ஆருண் முன்னிலை வகித்தார்.பஞ்.செயலர் பார்த்திபன் வரவேற்றார்.சங்கர்,பின்னர் பஞ்.தலைவர் பூஜைகள் செய்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை திறந்து வைத்தார்.அப்போது வார்டு உறுப்பினர்கள் தீபா,சங்கர் மற்றும் பணித்தள பொறுப்பாளர்கள், டேங்க் ஆப்ரேட்டர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.