தூத்துக்குடி குடியரசுதின விழாவில் கலெக்டா் இளம்பகவத் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி இந்தியா 1950ம் ஆண்டுக்கு முன்பு வரை ஆங்கிலேய அரசின் இந்திய அரசமைப்பு சட்டத்தை (1935) பின்பற்றி வந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1950ம் ஆண்டு ஜனவரி 26 அன்று ஆங்கிலேய அரசின் இந்திய அரசமைப்பு சட்டம் கைவிடப்பட்டு இந்தியா தனக்கென அரசியலமைப்பை உருவாக்கி அதை ஏற்றுக்கொண்டது. இது இறையாண்மை கொண்ட குடியரசாக இந்தியா மாறுவதை குறிப்பிடுவதால் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம் தருவை விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், நடைபெற்ற 77வது குடியரசுதின விழாவில் கலெக்டா் இளம்பகவத் தலைமை வகித்து தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் முன்னிலை வகித்தார்.

விழாவில் கலெக்டா் இளம்பகவத் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டு சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக வெள்ளைப்புறாக்களை பறக்கவிட்டார். மேலும், 615 மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட பள்ளி மாணாக்கர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகளை பார்வையிட்டார். பின்னா் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். தொடர்ந்து காவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கம் 2026க்கான பதக்கம் மற்றும் சான்றிதழ்களையும், காவல்துறை மற்றும் பல்வேறு அரசு துறைகளை சேர்ந்த 440 அரசு அலுவலர்களுக்கு சிறப்பாக பணிபுரிந்தமைக்கு நற்சான்றிதழ்கள் வழங்கினார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் மேம்பாட்டுத் திட்டம், கூட்டுறவுத்துறை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, மாவட்ட தொழில் மையம், தாட்கோ உள்ளிட்ட துறைகளின் சார்பாக 38 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 13 இலட்சத்து 25 ஆயிரத்து 922 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் இரவிச்சந்திரன், ஆணையர் ப்ாியங்கா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது சேதுராமலிங்கம், சார் ஆட்சியர் ஹிமான்ஷீ மங்கள், உதவி ஆட்சியர் பயிற்சி புவனேஷ் ராம், வருவாய் கோட்டாட்சியர்கள் பிரபு கௌதம் துணை ஆட்சியர் பயிற்சி மகேந்திரன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள், காவல் துறையினர், பயனாளிகள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *