வேப்பூர் ஜன-26
கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்தில் 77 வது குடியரசு தின விழாவையொட்டி
64 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடை பெற்றது
வேப்பூர் வட்டம்நல்லூர் ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் திருநீலமணிகண்டன் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் வேப்பூர் வட்டாட்சியர் செந்தில்வேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்
வேப்பூர் கிராமத்தில் ஊராட்சி செயலாளர் தங்க வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்திபன் கலந்து கொண்டார்
சேப்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி செயலாளர் பொறுப்பு திருநீல மணிண்டன் தலைமையில் நடைபெற்றது இதில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயகோபி மற்றும் அம்பேத்கார் இளைஞர் நற்பனி மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
திருப்பெயர் ஊராட்சியில் நடைபெற்ற சிராமசபை கூட்டதிற்கு ஊராட்சி செயலாளர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் சிறப்பு அழைப்பாளராக நல்லூர் துணை வட்டா வளர்ச்சி (சத்துணவு) செல்வகுமாரி கலந்து கொண்டார்
பா.கொத்தனூர் கிராமத்தில் ஊராட்சி செயலாளர் ஞானவேல் தலைமையில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மகளிர் குழுவினர் பலர் கலந்து கொண்டனர்
அனைத்து ஊராட்சிகளின் கூட்டத்திலும் நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்கீம் பிடிஒ கொளஞ்சி ரெகுலர் பிடிஓ முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்