தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம் கிராம ஊராட்சி ஒன்றியம் கொழுமங்குழி கிராம ஊராட்சியில் கிராமசபை: பங்கேற்பு குறைவால் மறுதேதி கோரி வாக்குவாதம்
குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொழுமங்குழி ஊராட்சியில் இன்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அரசு உத்தரவின்படி, கிராமசபை கூட்டத்தில் கட்டாயமாக 100 பேர் பங்கேற்க வேண்டும் என்பதும், அதற்குக் குறைவாக மக்கள் கலந்து கொண்டால் கூட்டம் மறுதேதிக்கு மாற்றப்படுவது வழக்கமான நடைமுறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற கொழுமங்குழி ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் மொத்தம் 81 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மாநில இளைஞரணி செயலாளர் யோகேஸ்வரன் அவர்கள், பங்கேற்பு குறைவைக் கண்டித்து கூட்டத்தை மறுதேதிக்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் மற்றும் பங்கேற்பாளர்கள் இடையே விவாதம் நடைபெற்றதாகவும், சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.