திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரியில் 77வது குடியரசு தின விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் கல்லூரி நிறுவனர் கலைமாமணி முனைவர் வி.முத்து தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
மேலும் மாணவர்கள் அனைவரும் நாட்டுப்பற்று மிக்கவர்களாகவும், சமூக செயல்பாடுகளில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் இந்த நிகழ்வில் கல்லூரி இயக்குனர்கள் எஸ்.அப்பாண்டைராஜ், டிகேஜி.ஆனந்தன், பா.சுரேஷ், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இறுதியில் கல்லூரி பொருளாளர் எஸ்.பழனிச்சாமி நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.