விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் ஏற்பாட்டில் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் மரபு நடை திருவிழா ஜனவரி 7 முதல் ஜனவரி 14 வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

செஞ்சிக்கோட்டையின் வரலாற்றை தெரிந்து விழுப்புரம் மாவட்ட மக்கள் மட்டுமல்லாது வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வரும் பயணிகளையும் ஈர்க்கும் விதமாக நமது பாரம்பரிய வரலாறு மற்றும் நினைவு சின்னங்களையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலும் முதன்முறையாக செஞ்சிக்கோட்டையில் மரபு நடை விழா எனும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு விருந்தினராக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் திண்டிவனம் சார் ஆட்சியர் செஞ்சி வட்டாட்சியர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தமிழ் செல்வன் சேது நாதன் செஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார் தொல்லியல் துறை அதிகாரிகள் மாவட்ட வருவாய் துறை அலுவலர்கள் மாவட்ட கவுன்சிலர் ஏழுமலை மற்றும் ராஜா தேசிங்கு பரம்பரையைச் சேர்ந்த பொந்தில் வம்சத்தினர் மற்றும் செஞ்சி ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *