தஞ்சையில் பல்வேறு அமைப்பினர் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசிய பிரதமரை தகுதி நீக்கம் செய்ய உதவி தேர்தல் அலுவலரிடம் மனு.

தஞ்சை வருவாய் கோட்டாட்சியரும், உதவி தேர்தல் அலுவலருமான இலக்கியாவிடம் இஸ்லாமியர்கள் குறித்து அவதூறாக பேசிய பிரதமர் மோடியை தகுதி நீக்கம் செய்ய மக்கள் அதிகாரம் தஞ்சை மாவட்ட செயலாளர் தேவா தலைமையில் மனு அளிக்கப்பட்டது.

           நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி இஸ்லாமியர்கள் குறித்து  சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரது பேச்சு நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

 அரசியல் சட்டத்திற்கு கட்டுப்பட்டு விசுவாசமாக நடப்பதாக உறுதிமொழி எடுத்து பதவியேற்ற பிரதமர் மோடி இதுபோன்று அவதூறு கருத்துக்களையும் மதவெறியை தூண்டும் வகையிலும் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

பிரதமர் மோடி மீது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தனி நபர்கள் பல்லாயிரக்கணக்கானோர் புகார் மனுக்களை அனுப்பி உள்ளனர். 

மோடியின் பேச்சு சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாக உள்ளது. எனவே தேர்தல் ஆணையம் உடனடியாக  தேர்தல் பிரசாரத்தில் மோடி ஈடுபடுவதை தடை செய்ய வேண்டும் . 

அவர் தேர்தலில் நிற்பதற்கு தகுதி நீக்கம் செய்ய வேண்டும். உரிய சட்டப்பிரிவு படி குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும். மோடியை பிரதமர் பதிவிலிருந்து நீக்க குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று மனுவில் கூறியிருப்பதாவது.

    இந்த நிகழ்வில் மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், தமிழ்தேச மக்கள் முன்னணி தலைமை நிர்வாகி அருண்சோரி, இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை மதிவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர துணை செயலாளர் மூர்த்தி, மக்கள் கலை இலக்கிய கழக மாநகர செயலாளர் சாம்பான் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த மனுவானது இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு சென்று சேரும் வகையில் அனுப்பப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *