எல்.வி.எம் 3- எம்.3 ராக்கெட் வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எல்.வி.எம் 3- எம்.3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலுன்கள் பறக்கவிட்டு மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இஸ்ரோ ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து எல்.வி.எம் 3- எம்.3 ராக்கெட் மூலம் 36 ஒன்வெப் செயற்கை கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.பிராட்பேண்ட் இ

ணையை சேவையை மேம்படுத்தும் வகையில் ஒன்வெப் செயற்கை கோள்கள் அனுப்பபட்டுள்ளது. எல்.வி.எம் -3 இஸ்ரோவின் அதிக எடை கொண்ட ராக்கெட்டாகும். என்கிற தகவலை மாணவர்கள் முன்னிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மாணவர்களுக்கு எடுத்து கூறினார்.இந்த சாதனையை செய்த இஸ்ரோவின் அனைத்து விஞ்ஞானிகள்,பொறியாளர்கள்,தொழில்நுட்ப ஊழியர்கள் அனைவருக்கும் பள்ளி மாணவர்களால் வண்ண பலூன் பறக்கவிடப்பட்டு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஸ்ரீதர், செல்வமீனாள் ஆகியோர் செய்து இருந்தனர்.இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரிய,ஆசிரியைகள்,மாணவ,மாணவியர்கள் பங்கேற்றனர்.
பட விளக்கம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எல்.வி.எம் 3- எம்.3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்கு வண்ண பலூன் பறக்க விட்டு பள்ளி மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.