தக்காளி பழம் பறிக்க கற்றுக்கொண்ட பள்ளி மாணவர்கள்

விவசாயம் செய்ய கற்றுக்கொண்ட மாணவர்கள்

பக்க ஒட்டு என்பது என்ன ? விளக்கமளித்த விவசாய அதிகாரி

அரசு தோட்டக்கலைப் பண்ணையில் நடுநிலைப் பள்ளி மாணவர்கள்

விண்பதியம்,மண் பதியம் இடுதல் எவ்வாறு செய்வது?

மென்த்தண்டு ஒட்டு,நெருக்கு ஒட்டு எவ்வாறு செய்வது?

மாணவர்களுக்கு நேரடி செயல் விளக்கம்

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு தோட்டக் கலைப் பண்ணைக்கு சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் களப்பயணமாக நேரில் சென்று டிராக்டர் ஒட்டி பழகி தக்காளி பழம் பறிக்க கற்றுக்கொண்டனர்..
மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் களப் பயணம் சென்றனர்.

மாணவர்களை அரசு தோட்டக் கலைப் பண்ணை அலுவலர் ராம் பிரசாத் வரவேற்றார்.மாணவர்களுக்கு முதலில் மல்லிகை,கத்தரி,மாமரம்,புளியமரம்,முந்திரி,பூவரசு,கொய்யா,அரளி போன்ற செடிகளை பற்றி விரிவாக எடுத்து கூறினார்.
குழித்தட்டு நாற்றங்கால் உற்பத்தி எவ்வாறு செய்வது என்பது குறித்து நேரடியாக செயல் விளக்கம் செய்து காண்பித்தார்.மேலும் விண் பதியம் இடுதல்,மண் பதியம் இடுதல்,மென்தண்டு ஒட்டு,நெருக்கு ஒட்டு ,கவாத்து செய்தல் எப்படி என்பதை நேரடியாக தோட்டக்கலை பண்ணை உதவி அலுவலர் மாயவேல் விளக்கினர்.மாணவர்களும் இதனை அங்கு நேரடியாக செய்து பழகினர். ஆசிரியை செல்வமீனாள் பள்ளியிலிருந்து மாணவர்களை அழைத்து சென்றார் .இன்றயை நிலையில் விவசாயம் செய்வதற்கு ஏதுவாக நடுநிலைப் பள்ளி அளவிலான மாணவர்களை நேரடி களப் பயணத்தின் வாயிலாக விழிப்புணர்வு அடைய செய்தது மாணவர்களிடையே நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது.அனைத்து மாணவர்களுக்கும் டிராக்டர் ஓட்ட கற்று கொடுக்கப்பட்டது.டிராக்டர் ஒட்டியது வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவம் என்று மாணவர்கள் கூறினார்கள்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு தோட்டக் கலைப் பண்ணைக்கு சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் களப்பயணமாக நேரில் சென்று டிராக்டர் ஒட்டி பழகி தக்காளி பழம் பறிக்க கற்றுக்கொண்டனர்..m

தோட்டக்கலை அலுவலர் ராம் பிரசாத், உதவி அலுவலர் மாயவேல் மாணவர்கள் அனைவருக்கும் நேரடி செயல் விளக்கம் அளித்தனர்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம், ஆசிரியை செல்வமீனாள் ஆகியோர் மாணவர்களை அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *