நிக்கோலா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நான்காவது சாதனை ஆசிய பதிவு புத்தகத்தில் இடம்பெறும் நிகழ்வு.


புழல் அடுத்த கதிர்வேடு பிர்லா அவென்யூ பகுதியில் இயங்கி வரும் நிகோலா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் கடந்த 9 ஆண்டுகளாக இளைஞர்கள், பெண்கள் மற்றும் சமுதாயத்தின் விளிம்புநிலையில் உள்ள அனைவருக்கும் பல்வேறு இலவச தொழில் திறன் மேம்ப்பாட்டு பயிற்சிகளை அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வரும் நிர்வாக இயக்குனர் சுந்தரபாண்டியன் தனது விடா முயற்சியில் நான்காவதாக ஆசிய புத்தக பதிவில் சாதனை படைத்துள்ளார்.

குறிப்பாக கடந்த வருடம் சுமார் 1,300 இளைஞர்களுக்கு ஆட்டோமொபைலில் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சியையளித்து பல முன்னணி நிறுவனங்களில் அவர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தந்திருக்கிறது.

இந்நிலையில் இங்கு தொழில் பயிற்சிபெற்ற 20 இளைஞர்களை தேர்ந்தெடுத்து.
ஒரு இருசக்கர வாகனத்திற்கு இருவர் வீதம் பத்து நிமிடத்திற்குள் பத்து இருசக்கர வாகனங்களில் உள்ள பாகங்களை தனித்தனியே கழற்றி அதனை மீண்டும் ஒன்றினைத்து இன்ஜினை இயக்கி சாலையில் ஓட்டி காண்பித்தனர். இந்த நிகழ்வை ஆசிய புத்தக பதிவில் இடம் பெறச் செய்து அதற்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக டிபென்ஸ் ரிசீர்ச் டெவலப்மெண்ட் ஆர்கனிஷேசன் மூத்த தொழில்நுட்ப வல்லுநர் கிருஷ்ணகுமார் , வருமான வரித்துறை ஆணையர் நந்தகுமார் IRS , புழல் சரக காவல் உதவி கமிஷனர் சகாதேவன் , சென்னை மாநகராட்சி 31 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சங்கீதாபாபு , சமூக சேவகர் பாபு, உட்பட பல முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வை கண்டு வியந்து பயிற்சி பெற்ற மாணவர்களை வெகுவாக பாராட்டினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *