கொடிமங்கலத்தில் 2500.ஆண்டுகள் பழைமை வாய்ந்த குமரன் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலாயம் விழா நடந்தது.

சோழவந்தான்

மதுரை மாவட்டம் மேற்கு தாலுகாவில் உள்ள கொடிமங்கலம் கிராமத்தில் வைகையாற்றுக்கு தென்கரையில் அமைந்து அருள்பாலித்து வரும் குமரன் திருக்கோவில் அமைந்துள்ளது.

இக்கோவில் 2500.ஆண்டுகளுக்கு முன் மதுரை ஆண்ட பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டு நாயக்கர் மன்னார்களால் குடமுழக்கும் நடத்தப்பட்டது. என இக்கோவில் கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் வடக்கு பார்த்து மூலவர் குமரன் அருள்பாலித்து வரும் இத்திருத்தலத்தில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவில் கருவறை முன்
மண்டபம் மயில் மண்டபம்.ஆகியவைகள் புனரமைப்பு மற்றும் புதிய ராஜகோபுரம். மற்றும் கோவில் சுற்று சுவர் உள்ளிட்ட வைகளுக்கான திருப்பணி தொடங்க திருபணிகுழவினரால் தீர்மானிக்கப்பட்டு நேற்று திரு கோவில் வளாகத்தில் சிவச்சாரியார் ராஜாசண்முகம் தலைமையில் யாகசாலை தொடங்கி வேதமந்திரங்கள் ஓதிபட்டு பின்னர் காலை 9.50.மணியளவில்
.மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகங்கள் நடந்தேறிய பாலாலாயம் நடந்தது.இந்நிகழ்வில் திருகோவில் பரம்பரை அறங்காவலர் தொழில்அதிபர் பழனிசாமி ஊராட்சி மன்ற தலைவர் குமரன் வைத்தியநாதன் முருகன்.மற்றும் மேற்கு தாசில்தார் மீனாட்சி. சுந்தராஜர்பெருமாள் திருகோவில் பரம்பரை அறங்காவலர் நெடுஞ் செழியபாண்டியன்.
வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டி. ஒன்றிய கவுன்சிலர் சரவணன்.மாநில பிற்பட்டோர் நலத்துறை உறுப்பினர் பெரியசாமி. கோவில் ஆய்வாளர் இளவரசி செயல் அலுவலர் இளமதி. கணக்கர் பூபதி வசந்த்.உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். .மேலும் இவ்விழாவில் 1000.பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *