தூத்துக்குடி, ஜூலை 4:

தூத்துக்குடி மாநகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சகாயராஜ், காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி, தெற்கு மாவட்ட தலைவர் முத்துமணி உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் பெருமாள்சாமி, முன்னாள் அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கே.சி. வேணுகோபால், கிரிஷ் சோடன்கர், மாணிக்கம் தாகூர் ஆகியோரை பொதுமேடைகளில் தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார்.

மேலும், நேற்று தனது வீட்டின் மீது மர்ம நபர்கள் கற்களை வீசியதாகவும், இந்த சம்பவம் முன்னாள் அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் இருவர் மீதும் புகார் அளித்துள்ளேன்.

அத்துடன், சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் நிர்வாகி ஒருவரின் ஆட்டோவை அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர்கள் சேதப்படுத்தி தாக்குதல் நடத்தினார்கள், அதன் தொடர்ச்சியாகவே தற்போதைய சம்பவம் நடைபெற்றுள்ளது.

காங்கிரஸ் தலைவர்களை தொடர்ந்து இழிவுபடுத்தி பேசி வரும் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், நேற்று தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.7 லட்சம் லஞ்சப்பணம் கைப்பற்றப்பட்ட சம்பவத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்து ஊழலை வெளிக்கொண்டு வருவதாக தெரிவித்திருந்தேன். அதனை திசைதிருப்பும் நோக்கிலேயே என் வீட்டின் மீது கற்கள் வீசப்பட்டதாக சந்தேகிக்கிறேன் என்றும் பெருமாள்சாமி கூறினார்.

இறுதியாக, “திமுகவினர் ரவுடிசத்தை கையில் எடுத்துள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் எதற்கும் அஞ்ச மாட்டார்கள்” என்று பெருமாள்சாமி தனது பேட்டியில் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *