கோவை மாவட்டம் வால்பாறையில் நடைபெற்ற கோடைவிழா வின் நிறைவு நாள் விழா கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் சார் ஆட்சியர் பிரியங்கா, நகராட்சி தலைவர் அழகு சுந்தர வள்ளி, நகராட்சி ஆணையாளர் (பொ) வெங்கடாசலம், நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது

முன்னதாக நகர் மன்ற துணைத்தலைவர் ச.செந்தில் குமார் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார் இவ்விழாவில் தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வுத்துரை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கலந்து கொண்டு விழா பேருரையாற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்தார் விழா மேடையில் பேசியபோது கோவை மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி பெரும் சாதனை படைத்து வரும் தமிழக முதல்வரின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்துள்ள மாவட்டம் என்பதால் வால்பாறை வரை பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மற்றும் நலத்திட்டங்களை வழங்கி வருகிறார்

மேலும் வால்பாறை பகுதி மக்களின் வேண்டுகோளாக தமிழகம் முழுவதும் இயங்கிவரும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து வால்பாறை பகுதியிலும் இயக்க சட்டமன்றத்தில் தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று விரைவில் அதைசெயல்படுத்தவும், வால்பாறை நகராட்சியை முதல் நிலை நகராட்சியாக மாற்ற அதற்கான அனைத்து அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தவும், இனிவரும் காலங்களில் ஆண்டுதோறும் கோடைவிழா தொடர்ந்து நடைபெறவும் நடவடிக்கை மேற்க்கொள்ளப்படும் என்று கூறினார்

அதைத்தொடர்ந்து ரூ.13.55 கோடி மதிப்பில் 7 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து 16.75 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டியதைத்தொடர்ந்து 39 லட்சத்து 11 ஆயிரத்து எழுபது ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், அரசு பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பில் முதல் மூன்று இடம் பிடித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கினார் பின்பு விழாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை கண்டுரசித்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது தமிழகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுவரும் திராவிட மாடல் ஆட்சி ஒட்டுமொத்த மக்களின் மேல் அக்கரை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது

வால்பாறையில் சுமார் 35 கோடி மதிப்பில் சாலைபணிகள் நடைபெற்று முடிந்துள்ளது மேலும் பல்வேறு வளர்ச்சிப் தொடர்ந்து நடைபெறும், அதேபோல வால்பாறை நகராட்சியை அனைத்து வளர்ச்சிகளுடன் முதல்நிலை நகராட்சியாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும், எதிர்கட்சியான அதிமுக,பாஜக கட்சிகள் என்னதான் குற்றச்சாட்டுகள் வைத்தாலும் மக்களின் மகத்தான திராவிடமா டல் அரசு முழு ஆதரவோடு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40 துக்கு 40 என்ற விகிதத்தில் வெற்றி பெறும் பொறுத்திருந்து பாருங்கள் என்றும் கூறினார் வெகுசிறப்பாக நடைபெற்ற இந்த கோடைவிழா நிகழ்ச்சியில் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் கட்சி தொண்டர்களும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *