அலங்காநல்லூர் ஒன்றிய பகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பிறந்தநாள் விழா.முதியோர் காப்பகத்தில் அன்னதானம்.

அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு அரியூர் கிராமத்தில் அமைந்துள்ள லியோ லைஃப் முதியோர் காப்பகத்தில் சோழவந்தான் மாவட்ட செயலாளர் மெடிக்கல் ரமேஷ் தலைமையில் முதியவர்களுக்கு இனிப்பு வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. அதற்கு முன்னதாக அழகாபுரி ஊராட்சியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் விமல்ராஜ், மாவட்ட பொருளாளர் பொதும்பு ரமேஷ், ஒன்றிய செயலாளர் ரவி, ஊராட்சி செயலாளர்கள் சங்கீதா, விஜயராமன் வார்டு செயலாளர்கள் செந்தில், முருகன், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.