எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அடுத்த வானகிரி மீனவ கிராமத்தில் புதிய டீசல் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலையத்தை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வானகிரி மீனவ கிராமத்தில் தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் சார்பாக புதிய டீசல் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலைய துவக்கம் மற்றும் 75 விழுக்காடு மானியத்தில் மீனவர்களுக்கு உயிர் காப்பு சட்டைகள் வழங்கும் விழா நடைபெற்றது
வானகிரி கிராமத்தில் இணையத்தின் கட்டுப்பாட்டில் கீழ் விசைப்படகு மற்றும் நாட்டு படகு உரிமையாளருக்கு மானிய விலையில் டீசல் விற்பனை நிலையத்தில் இருந்து டீசல் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பொதுமக்கள் பயன்பெறும் வகையில் டீசல் 15 கிலோ லிட்டர் மற்றும் பெட்ரோல் 20 கிலோ லிட்டர் கொண்ட சில்லறை விற்பனை நிலையம் அமைக்க பணி முடிவடைந்த நிலையில் மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம் முருகன் மற்றும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோர் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.
இதன் மூலம் பத்துக்கு மேற்பட்ட மீனவ கிராமங்கள் பொதுமக்கள் பயன்பெறுவார்கள் .இதேபோன்று 2023- 24 ஆம் ஆண்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அவர்களால் சட்டப்பேரவையில் தமிழ்நாட்டில் உள்ள பத்தாயிரம் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படுகளுக்கும் 25 விழுக்காடு மானியத்தில் படகு ஒன்றுக்கு 4என்று மொத்தம் 40 ஆயிரம் உயிர் காக்கும் சட்டைகளை மீனவர்களுக்கு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் முன்னால் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன் ஒன்றிய செயலாளர் பஞ்சு குமார், பிரபாகரன், மற்றும் வானகிரி மீனவகிராம பஞ்சாயத்தார்கள் மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.