அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது உலக திருக்குறள் கூட்டமைப்பு அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் தேர்வுக்கான விருப்ப மனு பட்டியல் பெறப்பட்டது
தலைமை துறை இயக்குனர் முனைவர் சின்னதுரை தலைமையில் அனைத்து தேர்தல் பணிகளும் நிறைவு செய்யப்பட்டு நிர்வாகிகள் தேர்தல் படிவங்கள் பெறப்பட்டு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டது
அரியலூர் மாவட்ட தலைவர் பொறியாளர் நாகமுத்து மாவட்ட செயலாளர் செல்வேந்திரன் பொருளாளர் தியாகராஜன் துணைத்தலைவர்கள் ராஜேஸ்வரி, சுப்பிரமணியன் மாவட்ட துணை செயலாளர்கள் தமிழ் களம் இளவரசன், ஆனந்தி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
தேர்தல் சிறப்பு அழைப்பாளர்களாக அமைப்பின் பொருளாளர் நல்லாசிரியர் சௌந்தர்ராஜன் அமைப்புச் செயலாளர் வேளாண் பொறியாளர் காசிநாதன் ஆகியோர் தேர்தல் பார்வையாளர்களாக பணியாற்றினார்கள் அரியலூர் மாவட்ட தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பொறியாளர் நாகமுத்து அவர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது