தன்னம்பிக்கையை தரும் இலக்கியங்களை மாணவர்கள் படிக்கவேண்டும் என, மதுரை உலகத் தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.
உலகத் தமிழ்ச்சங்கமும், மதுரை ஏ.பி.டி துரைராஜ் மேல்நிலைப் பள்ளியும் இணைந்து, தமிழ் கூடல் நிகழ்ச்சியை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடத்தியது. ஆய்வறிஞர் சோம சுந்தரி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். தமிழ்ச் சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா தலைமை வகித்தார்.
திருச்சி நகைச்சுவை மன்றச் செயலாளர் சிவகுருநாதன் பேசியதாவது; சங்க காலம் முதல் சமகாலம் வரை ஏராளமான தன்னம்பிக்கை கருத் துகள் இலக்கியத்தில் உள்ளன. தன்னம்பிக்கையை தரும் ஆத்திசூடி முதலிய அற இலக்கியங்களை மாணவர்கள் படிக்கவேண்டும் என்றார்.
புதுச்சேரி தமிழ்ப் பேராசிரியை விஜயராணி பேசுகையில், ‘தொல்காப்பியர் கூறியவற்றில் முதல், கரு, உரிப்பொருள் பாகுபாடுகள் முக்கியமானது.
மக்களின் வாழ்வியலைப் பொருளதிகாரத்தின் மூலம் எடுத்துரைத்தார். காட்டை மாற்றி நாடாக்கும் வரலாற்றை முல்லை நிலம் காட்டுகிறது. தொல்காப்பியம் மூலம் ஆயர் சமூகத்தின் எச்சத்தை மருதநிலம் காட்டியது’ என்றார்.