திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி மேற்கு ஒன்றிய பாமக ஆலோசனை கூட்டம் செல்லூரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவாரூர் வடக்கு மாவட்ட பாமக செயலாளர் வேணு.பாஸ்கரன் தலைமை வகித்தார்,
முன்னதாக வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் கணேச.சண்முகம் அனைவரையும் வரவேற்று பேசினார், மாவட்ட தலைவர் பழனி, உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் உலகநாதன், மாவட்ட துணை செயலாளர் மணிகண்டன், கொடாரச்சேரி மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.மகேந்திரன், முருகேசன், சத்தியமூர்த்தி, வன்னியர் சங்க ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், குடவாசல் பேரூர் செயலாளர் இளங்கோவன், திருவாரூர் நகர செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் உறுப்பினர் படிவத்தை பூர்த்தி செய்வது, கொடி ஏற்றுவது,மருத்துவர் அய்யா அறிவித்த வன்னியர் தனி இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு கிராமங்கள் தோறும் சென்று அனைவருக்கும் அழைப்பு விடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நகர செயலாளர் முருகன், கிளை செயலாளர் கார்த்தி, இளைஞர் சங்க பாலாஜி, ராகேஷ், மகளிர் சங்க நிர்வாகிகள் ஆர்.சாவித்திரி, கே. சரஸ்வதி, எஸ்.சாந்தா, ஆர்.கே.எம்.கவிதா, ஜெ. ராஜவள்ளி மற்றும் செல்லூர் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உழவர் பேரியக்க ஒன்றிய செயலாளர் துரை.ஜெயவீரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.