தஞ்சைத் தமிழ் மன்றத்தின் நவம்பர் திங்களுக்கான திங்கள் கவியரங்கம் மன்னார்குடி எஸ் பி ஏ பதின்மப்பள்ளியில் நடைபெற்றது. தென்பரை தமிழன்பன் கவியரங்க தலைமை ஏற்று கவியரங்கத்தை நடத்தினார் தஞ்சைத் தமிழ் மன்ற நிறுவனர் செயலர் தமிழ் செம்மல் இராம வேல்முருகன் மற்றும் நிலா முற்றத் தமிழ் இலக்கியப் பேரவை நிறுவனர் திரு முத்துப்பேட்டை மாறன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
மன்னை மிட்டவுன் சுழற்சங்கத்தின் தலைவர் செயலர் உள்ளிட்டோர் நிகழ்வுக்கு வருகை தந்து சிறப்பித்தனர். எஸ்பிஏ பதின்மப் பள்ளியின் முதல்வர் வாழ்த்துரை வழங்கினார்.
தஞ்சாவூர் கும்பகோணம் மன்னார்குடி தென்பரை திருத்துறைப்பூண்டி திருவிடைமருதூர் திருநாகேஸ்வரம் வலங்கைமான் பட்டீஸ்வரம் பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் இருந்து வருகை தந்த 30க்கும் மேற்பட்ட கவிஞர்கள் தமிழில் பேசுவோம் தமிழாகப் பேசுவோம் என்ற தலைப்பில் கவிதைகளை வழங்கினர்.
கவியரங்கத்துக்கு வருகை தந்தவர்களை கவியரங்கப் பேரவை இயக்குனர் கவிஞர் இளையதீபன் வரவேற்றார். தஞ்சைத்தமிழ் மன்றத்தின் துணைச் செயலாளர் தென்பரை ராகபாஸ்கர் நன்றியுரையாற்றினார்.