நாளிதழ் அலுவலகத்தை நேரில் பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்

மதுரை – பத்திரிக்கை அலுவலகத்தில் நாளிதழ் எவ்வாறு தயாராகிறது , செய்திகள் எவ்வாறு பதிவேற்றப்படுகிறது ? என்பது தொடர்பாக பள்ளி மாணவர்கள் நேரில் அறிந்து கொண்டார்கள் .

                                    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் களப்பயணமாக  நேரில்  நாளிதழ் அலுவலகத்தை பார்வையிட பள்ளி தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமையில் சென்றனர். 

                              மக்கள் குரல் நாளிதழ் மதுரை பதிப்பு  பொறுப்பாளர் தீனதயாளன் மாணவர்கள் அனைவரையும் வரவேற்று , நாளிதழ் அச்சிடுவது தொடர்பான பல்வேறு தகவல்களையும் விரிவாக விளக்கினார். 

 நாளிதழ் அலுவலகத்தில் ஒவ்வொரு அறையாக அழைத்துச் சென்று அங்குள்ள மெஷின்கள் தொடர்பாகவும், பல்வேறு தகவல்களை விரிவாக எடுத்துக் கூறினார்.   

                  இமெயில்  வழியாக செய்திகள் அனுப்பப்பட்டு  அவற்றை சி.டி.பி என்கிற  மிஷின் வழியாக பிளேட்டுகளில் ஏற்றி அவற்றில் ரசாயனங்கள் ஊற்றப்பட்டு அவை அச்சு இயந்திரத்தில் உள்ளே செலுத்தப்பட்டு எவ்வாறு பத்திரிகையை அச்சாகி வெளிவருகிறது என்பதை விரிவாக விளக்கினார்.

  நாளிதழின் விளம்பர மேலாளர் இளங்கோ  மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார். 

                    இளம்வயதில் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் விரிவாக , விளக்கமாக நாளிதழ் எவ்வாறு தயாராகிறது ,  நாளிதழில் எவ்வாறு செய்திகள் பதிவேற்றபடுகிறது என்பன போன்ற தகவல்களை விரிவாக புரிந்து கொண்டார்கள்.

                                பள்ளி  ஆசிரியர் கருப்பையா மாணவர்களை அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். 

பட விளக்கம்: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ மாணவியர் மதுரை மக்கள் குரல் நாளிதழ் அலுவலகத்தில் நாளிதழ் எவ்வாறு தயாராகிறது , செய்திகள் எவ்வாறு பதிவேற்றப்படுகிறது ? என்பது தொடர்பாக பள்ளி மாணவர்கள் பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் நேரில் சென்று அறிந்து கொண்டார்கள் . மக்கள் குரல் மதுரை பதிப்பின் பொறுப்பாளர் தீனதயாளன் மாணவர்களுக்கு விரிவாக பல்வேறு தகவல்களை விளக்கினார். விளம்பரப் பிரிவு மேலாளர் இளங்கோ மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் அளித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *