வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
முதல்வர் படிப்பகம் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் துவக்கி வைத்தார்.
போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக குறைந்த கட்டணத்தில் இணைய வசதி,ஏசி, அமர்ந்து படிக்கும் வசதி, கணினி, போன்ற வசதிகளுடன் பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிதி உதவியுடன் “முதல்வர் படிப்பகம்” அமைக்க பஸ் நிலையம் அருகே திருவள்ளுவர் சாலையில் திண்டுக்கல் மாநகராட்சி சொந்தமான இடத்தில்
இன்று பூமி பூஜை நடைபெற்றது.
பூஜையை மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் செந்தில் முருகன், பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.