சம்பா பயிர் காப்பீடு நவம்பர் 31 வரை காலநீட்டிப்பு வழங்கிட வேண்டும் என தமிழக அரசுக்கு மன்னார்குடியில் பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள்…
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்
பி ஆர் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..
காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை கொள்முதலில் ஏற்பட்ட குளறுபடியால் அறுவடை பணிகள் தாமதமாகி நவம்பர் 10ம் தேதி வரையிலும் குறுவை அறுவடையும்,நெல் விற்பனையிலும் விவசாயிகள் ஈடுபட்டனர். இதனால் சம்பா சாகுபடி பணிகள் துவங்குவது காலதாமதமாகி தற்போது துவங்கி தீவிரமடைந்துள்ளது.
மேலும் தற்போது வாக்காளர் திருத்த பணி கிராமப் பகுதிகளில் தீவிரமாக நடந்து வருகிறது. கிராம நிர்வாக அலுவலர்கள் முற்றிலும் பொறுப்பாக்கப்பட்டு அப்பணியில் முழுமையாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் காப்பீடு செய்வதற்கு சிட்டா, அடங்கள் பெறுவதில் தடை ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழக அரசு நவம்பர் 31 வரையிலும் காப்பீடு செய்வதற்கு கால நீட்டிப்பு வழங்கி விவசாயிகளை பாதுகாக்க முன்வர வேண்டும் என தெரிவித்தார்.