தூத்துக்குடியில் அமைக்கப்பட்டிருக்கும் ஆறு ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 363 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் குறித்து, மாப்பிள்ளையூரணி – தாளமுத்துநகர், சுனாமி காலனி, குறுக்குச்சாலை, சந்திரகிரி ஆகிய பகுதிகளிலுள்ள நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் நீரேற்றும் நிலையங்களில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில் ஆய்வு செய்தார். மேலும், பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்தார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.