திண்டுக்கல் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் திண்டுக்கல் மாவட்ட சட்டபணிகள் குழு மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கம் இனைத்து நடத்திய குழந்தைகள் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செயலாளர், முனைவர் சார்பு நீதிபதி.திரிவேணி, முனைவர்.சத்திய நாராயணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர். மல்லீஸ்வரி, கண்காணிப்பாளர், இந்திய செஞ்சிலுவை சங்கத்தை சார்ந்த. காஜமைதீன் அவைத்தலைவர், Er.ஷேக்தாவுத் துணை அவைத்தலைவர். சுசிலா மேரி, பொருளாளர்.சையது அபுதாகீர்,மாநில நிர்வாக குழு உறுப்பினர். ஆறுமுகம்,ஜெராஸ்டு ஜான்சன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்.தீபக், தலைவர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு, வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு மற்றும் போதை பொருட்களின் தீமைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது,41 பள்ளி குழந்தைகளுக்கு உபயோக பொருட்கள் வழங்கப்பட்டன.