திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், நல்லூர் கிராமத்தில் ஸ்பிக் & கிரீன் ஸ்டார் உர நிறுவனம் மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனை இணைந்து நேற்று வெள்ளிக்கிழமை நல்லூர் ஸ்ரீ சுந்தரவரதராஜப் பெருமாள் கோவிலில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு மாபெரும் இலவச மருத்துவ முகாமை நடத்தியது,
இம்முகாமை ஸ்ரீ முருகானந்தம் பெர்டிலைசர் உரிமையாளர் முருகானந்தம் தலைமை ஏற்று நடத்தினார். இந்நிகழ்ச்சியை ஸ்பிக் மற்றும் கிரீன் ஸ்டார் உர நிறுவனத்தின் வேலூர் மண்டல மேலாளர் எம்.பாலமுருகன், விற்பனை அலுவலர் ஜிதன்ராஜ், முருகானந்தம் மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையின் மருத்துவர்கள் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
முகாமில் பொதுநல மருத்துவர், பொது அறுவை சிகிச்சை நிபுணர் எழும்பியல் நிபுணர், மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர், கண் மருத்துவர் நிபுணர் ஆகியோர் கலந்துகொண்டு நல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் இருக்கும் கிராமப்புற விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் இலவசமாக மருத்துவ சிகிச்சை அளித்தனர். இதில் சுமார் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், பொதுமக்களும் பயன்பெற்றனர்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.