திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று ஒரு வாக்காளர்களுக்கு இரண்டு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்குவார்கள்.
வீட்டிலுள்ள விவரம் அறிந்த எந்த ஒரு குடும்ப உறுப்பினரும் அந்த வீட்டுக்குரிய அனைத்து படிவங்களையும் பெற்றுக்கொள்ளலாம். கணக்கெடுப்பு படிவத்தில் நடைமுறையில் உள்ள வாக்காளர் பட்டியலில் பதிவாகியுள்ள பெயர் புகைப்படத்துடன் அனைத்து விவரங்களும் தலைப்பில் வழங்கப்பட்டிருக்கும். அதன் பிறகு போடப்பட்டிருக்கும் அனைத்து சுய விவரங்களையும் ஒவ்வொரு வாக்காளரும் நிரப்பிட வேண்டும். கணக்கெடுப்பு படிவத்தினை பெற்றிட வாக்காளர் இதற்கு முன்பு நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தின் வாக்காளர் பட்டியலில் உள்ள தனது பதிவுகளை இணைய தளத்தில் பெற்று நிரப்பிடலாம். வாக்காளர் பெயர், முந்தைய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கா விட்டால் அவர்களது தாய், தந்தை அல்லது தாத்தா நெருங்கிய உறவினரின் பெயர் மற்றும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த விவரங்களை கண்டறிந்து அவரது பெயரை உறவினராக நிரப்பலாம், அந்நேர்வுகளில் வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவத்தினை நிரப்பிட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் உதவுவார்கள்.
அனைத்து விவரங்களையும் பதிவு செய்த பின்னர் தங்கள் வசம் உள்ள இரண்டு படிவங்களில் ஒரு பிரதியில் வாக்காளர் கையொப்பமிட்டு தேவைப்படின், புதிய புகைப்படத்தை ஒட்டி வாக்குச்சாவடி நிலை அலுவலர் வசம் திருப்பி அளிக்க வேண்டும். மற்றொரு பிரதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஒப்புகை பெற்று தன்வசம் வைத்துக்கொள்ள வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பின்படி எத்தனை வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் தரும் போது எந்தவித ஆவணங்களையும் வழங்க தேவையில்லை. வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தினை செயலி வாயிலாகவும் அல்லது இணையதளம் வாயிலாகவும் நிரப்பி பதிவேற்றம் செய்யலாம். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்கள் வரப்பெற்ற கணக்கெடுப்பு படிவத்தினை நிரப்பப்பட்டுள்ள விவரங்களை இப்பணிக்காக வடிவமைக்கப்பட்டுள்ள செயலில் பதிவேற்றம் செய்து சரிபார்த்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு அனுப்புவார்கள்.
வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் டிசம்பர் 9- ம் தேதி வெளியிடப்படும். கணக்கெடுப்பு படிவங்களை வழங்காதவர்கள், நிரந்தர முகவரி மாறியவர்கள், இறந்தவர்களின் பெயர்கள், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது. இக்கணக்கெடுப்பு பணியினை உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் கண்காணிப்பாளர்கள். இது தொடர்பாக தங்களுக்கு தேவையான விளக்கங்களை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.