தூத்துக்குடி
மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் ஆர்.எம்.கே.எஸ்.சுந்தர் மற்றும் ஒன்றிய இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் வீரமந்திரகுமார் ஆகியோர் ஏற்பாட்டில் திமுக மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியில் இருந்து 100 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமா எடப்பாடி பழனிசாமி தலைமையையேற்று நேற்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் அவர்களை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.
கட்சியில் இணைந்தவர்களை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அதிமுக துண்டு அணிவித்து வரவேற்றார். மேலும், கட்சிப் பணிகளை சிறப்பாக செய்ய வாழ்த்துகளை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய கழக செயலாளருமான விஜயகுமார், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரும் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளருமான இரா. சுதாகர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட சிறுப்பான்மை பிரிவு செயலாளர் கே.ஜெ.பிரபாகர், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் காசிராஜன், திருச்செந்தூர் ஒன்றிய கழக செலயாளர் பூந்தோட்டம் மனோகரன், திருச்செந்தூர் நகரக் கழக செயலாளர் வி.எம்.மகேந்திரன், கிழக்கு பகுதி செயலாளர் சேவியர், வடக்கு பகுதி கழக செயலாளர் சந்தனபட்டு, மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், மாவட்ட கலை மற்றும் இலக்கிய பிரிவு சுரேஷ், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், பழக்கடை திருப்பதி, வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்கள் முனியசாமி, சரவணபெருமாள், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் சத்யாலெட்சுமணன், துணைச் செயலாளர் மகாலிங்கம், மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் ராஜா(எ)ராஜதுரை, பொருளாளர் பரிபூரணராஜா, திருச்செந்தூர் ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுநகர்கள் அணி செயலாளர் செல்வம், இணைந்தவர்கள் வீரமணி, சுரேஷ், சிவா, ரவி, சுந்தர், தீனா சுடலைமுத்து, சுப்பு, ராஜா, ராஜூபாய், மாதவன், கிருஷ்ணநாதன், ராமநாதன், கிருஷ்ணன், மணிகண்டன், சுதன், நம்பிராஜன், இசக்கிமுத்து, சங்கர், கோமதிசங்கர், அறுமுகநயினார், சக்தி, பிரதீப், ஆனந்தராஜ், கார்த்திக், அந்தோணிராஜ், சுடலைசெல்வம், வண்ணியபெருமாள், சுப்பிரமணியன், நட்டார் ஆனந்த், திருமுகன், சுந்தரேச பெருமாள், பரமசிவம், அருண், வசந்த், கிருஷ்ணகுமார், பாண்டி, சரவணமுத்து, ஐயப்பன், மான்முருகன், வேலு, வீரப்பன், முத்துசெல்வன், மதன், குமார், முத்துராஜ், பார்திபன், வேல்முருகன், பிரசாந்த், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.