அங்காள பரமேஸ்வரி வீர சாம்பவி சித்த பீடத்தில் அமாவாசை பூஜை.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள திருமுக்காடு ஊராட்சியில் அங்காள பரமேஸ்வரி வீர சாம்பவி சித்த பீடத்தில் அமாவாசை பூஜை நடைபெற்றது.
122, திருமுக்காடு ஊராட்சியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் வீர சாம்பவி சித்த பீடத்தில்
கார்த்திகை மாதம் அமாவாசையை யெட்டி சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள்
நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து அமாவாசை பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு விஜய வீர சாம்பவி சுவாமிகள் அருள் வாக்கு வழங்கினார் பக்தர்கள் தங்கள் குடும்பம் சுபிக்ஷவுடன் வாழ அருள் வாக்கு பெற்று திருக்கோயில் வளாகம் முழுவதும் சுற்றி வந்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று நண்பகல் 12 மணி அளவில் பக்தர்களுக்கு
தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது குறிப்பாக வரும் தை மாத அமாவாசை அன்று சிறப்பு வேள்வி பூஜை நடைபெறும் என்றுசுவாமிகள் பக்தரிடம் தெரிவித்தார்.
இவ்விழாவில் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு புதுச்சேரி
மற்றும் உள்ளூர் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அங்காள பரமேஸ்வரி வீர சாம்பவி சித்த பீடம்
சார்பில் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.