பாரதியஜனதாகட்சி, தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வளர்ச்சிப்பிரிவு சார்பாக மாமன்னர் ராஜேந்திர சோழன் கடாரம் (மலேசியா) வரை சென்று போரில் வெற்றிப் பெற்ற ஆயிரமாவது,ஆண்டுகள் நிறைவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. நிகழ்வில் மாநிலசெயலாளர் அருளரசன், மாவட்ட அமைப்பாளர் சக்திவேல், மாவட்ட இணைஅமைப்பாளர் கணேசன், மாவட்ட செயலாளர்கள் ஜெயராமன், கோவிந்தராஜு, அரிகோவிந்தன் மற்றும் மகளிர்அணி மாவட்ட செயலாளர் அஷ்டலட்சுமி அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் மகேந்திரவர்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.