துறையூர் நவ-19
திருச்சி மாவட்டம் துறையூர் ஜெமீந்தார் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் வழங்கினார்
துறையூர் ஜெமீந்தார் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் பள்ளியில் பயிலும் 169-மாணவர்கள், 134-மாணவிகள் என 303-மாணாக்கர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டியினை சட்டமன்ற உறுப்பினர் செ.ஸ்டாலின் குமார் வழங்கினார்.
இவ்விழாவில் நகர்மன்ற துணை தலைவர் மெடிக்கல் முரளி, பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராமன்,நகர்மன்ற உறுப்பினர் வீரமணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர் கிட்டப்பா மற்றும் பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள், மாணவ & மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்