கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வால்பாறை மேல்பகுதியில் எஸ்.ஐ.ஆர்.என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி கடந்த 4 ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது
இப்பணியில் சம்பந்தப்பட்ட பி.எல்.ஓ.அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து உரிய ஆவணங்களை பெற்று படிவத்தை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் அளிக்கும் தகவல்களை உறுதிசெய்து பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர்
அதேபோல வால்பாறை நகராட்சி 12 வது வார்டுக்கு உட்பட்ட அக்காமலை எஸ்டேட் பகுதியில் அப்பகுதி பி.எல்.ஓ.அலுவலர் கீதா ராணி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணியை அப்பகுதி வாக்காளர்களை நேரில் சந்தித்து துரிதப்படுத்தி வரும் நிலையில் மொத்தமுள்ள 730 வாக்காளர்களில் சுமார் 350 க்கும் மேற்பட்ட படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் 15 வாக்காளர்கள் டபுள் என்றியிலும் உயிரிழந்தவர்கள் சுமார் 33 பேர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யாமல் இடம் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது எனினும் எஸ்.ஐ.ஆர்.படிவத்தை பூர்த்தி செய்ய வாக்காளர்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர்