கரூர் செய்தியாளர் மரியான் பாபு

72 ஆவது அனைத்த்திந்திய கூட்டுறவு வாரவிழா நலத்திட்த்தை வழங்கிய ஆட்சியர்..
மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அட்லஸ் கலையரங்கத்தில் 72வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு 5,027 பயனாளிகளுக்கு ரூ. 52.03 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்ததாவது
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறையின் மூலம் பொதுமக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. கூட்டுறவு என்பது அடுத்தவர்களை சாரக் கூடாது என்ற ஒரு நினைப்போடு நாமே ஒரு கூட்டமைப்பை உருவாக்கி அந்த கூட்டமைப்பில் நமக்கு தேவையான விஷயங்களை செய்து கொண்டும் நம்மை நாமே வாழ்க்கை முறையில் மேலே கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்ட அமைப்புதான் இந்த கூட்டுறவு அமைப்பு என்பது.
 பொது விநியோகத் திட்டத்தின் கீழ்  நியாய விலைக் கடைகளில் அரிசி,கோதுமை, துவரம் பருப்பு, மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது.

அடிப்படையில் யாரும் உணவின்றி தவிக்கக் கூடாது என்ற ஒரு உன்னத நோக்கத்தோடு அமைக்கப்பட்ட அமைப்புதான் இந்த நியாய விலைக் கடைகள் மூலம் உணவு பொருட்கள் வழங்கக்கூடிய ஒரு உன்னதமான திட்டம்.


கரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் 122 கூடுதலாக பகுதி நேர நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.பொதுமக்கள் நெடுந்தூரம் சென்று பொருட்களை வாங்குவதில் உள்ள சிரமங்களை கண்டறிந்து பகுதி நேரக் கடைகளாக 122 கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.அந்த வகையில் 16 பகுதி நேர நியாய விலைக் கடைகளை முழு நேர நியாய விலைக் கடைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ள தாயுமானவர் திட்டத்தின் மூலம் 65 வயதுக்கு மேல் உள்ள முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் எல்லாருக்கும் வீடு சென்று அந்த பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

கரூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் 33,667 நபர்களுக்கு இல்லம் தேடி   பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.77 முதல்வர் மருந்தகங்கள் துவக்கப்பட்டு அதன் மூலம் மருந்து,மாத்திரைகள் அனைத்துமே 90% தள்ளுபடியோடு வழங்கப்படுகிறது.
அதேபோல் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர்க் கடன்கள், விவசாய கடன்கள்,கால்நடை வளர்ப்புக்கான கடன்கள், மகளிர் சுய உதவிகுழுக்களுக்கான கடன்கள் மற்றும் பிற்படுத்தோர் நலத்துறை மூலம் டாப் செட்கோ  கடன்கள், டாம்கோ  சிறுபான்மையினருக்கான கடன்கள் என பல்வேறு கடன்களை வழங்கி வருகிறது.
கூட்டுறவு சங்கங்களில் கடன் பெறுபவர்கள் கடன் தொகைகளை  உரிய கால அளவில் திருப்பி செலுத்தினால் கூட்டுறவு கடன் சங்கங்கள் இன்னும் வளம் பெருமென மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, 1455 நபர்களுக்கு ரூ. 15.60 கோடி மதிப்பீட்டில் பயிர்க்கடன் உதவிகளும், 1467 நபர்களுக்கு ரூ.16.88 கோடி மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு கடனுதவிகளும், 75 நபர்களுக்கு ரூ. 68.00 இலட்சம் மதிப்பீட்டில் மத்தியக் கால கடனுதவிகளும், 181 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த 2000 மகளிர்களுக்கு ரூ. 18.85 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகளும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் சார்பாக 1 நபருக்கு ரூ.1.00 இலட்சம் மதிப்பீட்டிலான கடனுதவியும் மற்றும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.00 இலட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளும் என மொத்தம் 5027 நபர்களுக்கு ரூ. 52.03 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் இ.ஆ.ப. வழங்கினார்.

இவ்விழாவில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி. செ. ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் இரா.மாணிக்கம் (குளித்தலை), ஆர்.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்), மாநகராட்சி மேயர் வெ.கவிதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ஆர். அபிராமி, துணை மேயர் ப.சரவணன், துணைப் பதிவாளர்கள் சுபாஷினி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *