அரூர் அருகே தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் புதிதாக கல்குவாரி அமைத்திட மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
ஜம்மன அல்லி ஊராட்சியில் 6.59.5 ஆக்டர் அரசு புறம்போக்கு நிலத்தில் தமிழ்நாடு கனிம வள நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் புதிதாக கல் குவாரி அமைப்பதற்காக அப்பகுதியில் உள்ள கிராம மக்களின் கருத்து கேட்டு கூட்டம் தென்கரைக்கோட்டையில் உள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. இந்தக் கருத்து கேட்பு கூட்டத்தில் கிராம பொது மக்கள், புதிதாக கல்குவாரி உருவாக்கினால் எங்களது கிராமவாசிகளுக்கு வேலையில் முன்னுரிமை வழங்க வேண்டும் அது மட்டும் இன்றி எங்களது கிராம மக்களின் சுற்றுப்புற சுகாதாரத்தினை உறுதி செய்த வேண்டுமென்ற கோரிக்கையை முன்னிறுத்தினர். இந்த கருத்து கேட்பு கூட்டமானது மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர், கவிதா தலைமை தாங்கினார்.
சுரங்கத் துறை மேலாளர் கணேசன் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் உதயகுமார், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சக்திவேல், கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பொது மக்களின் கேள்விகளுக்கு சிறப்பான முறையில் விளக்கம் அளித்து நிகழ்ச்சியை முடித்து வைத்தனர்.