தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி முழுவதும் கடந்த 19 20 21 ஆகிய நாட்கள் பெய்த வடகிழக்கு பருவமழையால் சில தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. பல்வேறு பகுதியில் இரவு கழிவுநீர் கால்வாய் அமைப்பது தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்வை சம்பந்தமாக நேரில் சென்று பல்வேறு பகுதியை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் ஆய்வு செய்து வரும் நிலையில் மாநகராட்சி 11வது வார்டுக்குட்பட்ட எழில் நகர் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தூர்வாரப்பட்ட பாதாள சாக்கடை மற்றும் கழிவு நீர் கால்வாய்களை அமைச்சா் கீதாஜீவன் பாா்வையிட்டாா்.
பின்னா் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எந்தவிதமான அடிப்படை பணிகளையும் முறையாக செய்யவில்லை. அதனால் பல்வேறு பாதிப்புகள் பொதுமக்களுக்கு ஏற்பட்டது. 2021ல் திமுக ஆட்சி அமைந்த பின் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு பல்வேறு கட்ட நடவடிக்ககைகளை மேற்கொண்டு நிதி ஓதுக்கீடு செய்தும் கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் வரும் காலங்களில் தேங்கக்கூடாது பொதுமக்கள் எந்த விதத்திலும் பாதிப்படைய கூடாது என்று கூறிய தின் அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
மாநகராட்சி பகுதியில் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட பாதிப்புகளை போல் இந்த ஆண்டு இதுவரை கூடுதலாக 9 சென்டிமீட்டா் வரை மழை பெய்துள்ளது. சில காலி மணைகளில் மட்டும் மழைநீர் தேங்கியுள்ளது. மற்றப்படி புதிய கால்வாய் வழித்தடங்கள் அமைக்கப்பட்டதின் வழியாக தண்ணீர் வௌியேறி சென்றுவிடுகிறது. சில பகுதிகளில் மட்டும் மின்மோட்டாா் மூலம் வௌியேற்றப்பட்டன. கடந்த நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில் ஓவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஓரு வகையில் மக்கள் நன்மை அடைந்துள்ளாா்கள். புதியதாக பல்ேவறு பகுதிகளில் தாா் சாலைகள் சிறுகுறு சந்து பகுதிகளில் பேவா் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைகிறதோ அப்போதெல்லாம் தமிழகத்திற்கு அது தான் பொற்காலம் காரணம் அனைத்து தரப்பினருக்கும் எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் மக்களுக்கான உாிமைகளை ஓன்றிய அரசிடம் போராடி சில உாிமைகளை பெற்று தரும் கொள்கையோடு முதலமைச்சர் ஸ்டாலின் பணியாற்றி வருவதால் தமிழ்நாட்டில் தமிழா்களின் நலன் மட்டுமின்றி அனைவரின் உாிமையும் பாதுகாக்கப்படுகிறது. எந்த மழை வந்தாலும் இந்தமுறை பொதுமக்களை பாதிக்காத அளவிற்கு முன்னெச்சாிக்கை நடவடிக்கையை இந்த அரசு எடுத்துள்ளது. அதனால் பொதுமக்கள் எந்தவித அச்சம் கொள்ள தேவையில்லை. எப்போதும் மக்கள் பணி செய்வது தான் எங்களது கடமை என்ற கடமை உணா்வோடு பணியாற்றி வருகிறோம் என்று கூறினாா்.
மாநகர திமுக செயலாளா் ஆனந்தசேகரன், கவுன்சிலா் தெய்வேந்திரன், முன்னாள் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி அல்பட் உள்பட பலர் உடனிருந்தனா்.