திருவாரூர்,
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச் சங்கம் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் சங்கங்கள் இணைந்து தமிழக அரசின் உழவர் அலுவலர் தொடர்பு திட்ட களபணியாளர்கள் இணைப்பை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவாரூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து 50க்கும் மேற்பட்ட தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தோட்டக்கலைத் துறை வளர்ச்சியை பாதிக்கக்கூடிய UATT 2.0 தோட்டக்கலைத்துறை பட்டம் மற்றும் பட்டையாதாரர்கள் எதிர்கால வாழ்வை பாதிக்கக்கூடிய திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், தோட்டகலைத்துறை கள அலுவலர்களை அவசர காலத்தில் பணியிடமாற்றம் செய்வதை உடனடியாக கைவிட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தோட்டக்கலைத்துறை அலுவலர் நல சங்கத் தலைவர் பிரதீப், உதவி தோட்டக்கலைத்துறை அலுவலர் நல சங்கத் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.